வெற்றிகரமாக ஆகப்பெரும் காதல் புத்தகத்தின் அட்டைப்படம் இன்று வெளியீடு செய்யப்பட்டிருக்கின்றது


படைத்தவள் எழுதுகிறேன்

வாரண மாயிரம் சூழ வலம்செய்து,

நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.

கோதையைத் திருமணம் செய்துகொள்ள கோவிந்தன் மணக்கோலம் கொண்டு வருகிறான். அப்படி வரும்போது அவனைச் சுற்றி ஓராயிரம் யானைகள் உடன் வருகின்றன. அவனை அந்த ஊரே பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கிறது. இவ்வாறு கண்ணன் மணப்பந்தலுக்கு வரும் அழகையும் கம்பீரத்தையும் தோழியிடம் சொல்லிப் பூரிக்கிறாள் கோதை.

இப்படியாக ......

இந்த ஆகப் பெரும் காதலில் உள்ள கவிதைகளை படித்து விட்டு

அமராவதி ஆற்றங்கரையில் துயில் கொண்டிருக்கும் பிறைமார்பன்

அதிகாலையில் பிறைமார்பன் வருவதாகவும்,

இந்தப் பிறை மறையும் முன்னரே,,

அவன் வரைந்த ஓர் மடலில் உள்ள மாலைகளை கையுடன் எடுத்து வருவதாய்

ஓர் காகிதத்தில் கையெப்பமிட்டு,,

அவனது கைப்பையில் உள்ள சீத்தாவின் தலை மயிரை பறக்க விட்டுவிட்டு

ஆற்றங் கரையில் உள்ள மணலில் பயணித்து வருவதாய்

கனா காண்கிறாள் சீத்தா 

அவன்  நிஜத்திலும் இவளிடம் சேர்வானாயின் அதுவே இப்புத்தகத்தின் வெற்றி....

A. சத்யா

தமிழ் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்

Post a Comment

0 Comments