மானாமதுரை அருகே ஊர் ஒற்றுமைக்காக கட்டிக்குளம் கிராமத்தில் 100 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் அம்மனுக்கு கறி, மீன், முட்டை படையல் வைத்து வினோத வழிபாடு - MAKKAL NERAM

Breaking

Wednesday, May 22, 2024

மானாமதுரை அருகே ஊர் ஒற்றுமைக்காக கட்டிக்குளம் கிராமத்தில் 100 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் அம்மனுக்கு கறி, மீன், முட்டை படையல் வைத்து வினோத வழிபாடு


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் ஊர் ஒற்றுமைக்காக 50 ஆண்டுகளுக்கு மேலாக அழகிய சவுந்திர நாயகி அம்மனுக்கு கிராமத்து பெண்கள் அசைவ உணவுகளை சமைத்து படையல் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து விநாயகர், மனித பொம்மை, ஜல்லிக்கட்டு காளை, கொடை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கொழுக்கட்டை மற்றும் கறி,மீன்,கருவாடு,முட்டை போன்ற அசைவ உணவுகளை சமைத்து பாரம்பரியம் மாறாமல் ஓலைப் பொட்டியில் வைத்து விளக்கேற்றி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.இதன் பின்னர் அழகிய சவுந்திர நாயகி அம்மன் கோயிலை சுற்றி வந்து அசைவ உணவுகளை படையல் வைத்து குலவையிட்டு வழிபாடு செய்தனர்.

மேலும் கோவில் பூசாரி வாயை கட்டிக் கொண்டு பெண்கள் கொண்டு வந்த அசைவ உணவுகளை அம்மனுக்கு படையலுக்காக எடுத்து வைத்த அழகிய சவுந்திர நாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அம்மனுக்கு பூஜைகள் முடிந்த பின்னர் பெண்கள் தாங்கள் கொண்டு வந்த அசைவ உணவுகளை குடும்பத்தில் உள்ள பெண்களுடன் உண்டு மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment