கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பூஜை எல்லையம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 13ம் தேதி பந்தக்கால் நடவுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து கடந்த திங்களன்று காலை கிராம தேவதை பூஜை கணபதி ஹோமம் நடைபெற்றது அதன் பின் மாலை திரளான பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், தீப ஆராதனை, பிரசாத வினியோகம் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று யாகசாலை பிரவேச பூஜை ஹோமம் சுமங்கலி பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவின் நிறைவு நாளான இன்று புணர்பூஜை, விசேஷ தீப ஆராதனைக்கு பின் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நிரை வேத மந்திரகள் முழங்க சிவாச்சாரியர்கள் கோபுர கலசத்தின் மீது உற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர் அப்போது கூடி இருந்த பக்தர்கள் ஓம் சக்தி பரா சக்தி என முழக்கமிட்டனர் சாமி தரிசனம் செய்தனர் பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்க பட்டது.
இதில் கோவில் தலைவர் மனோகர் துணைத்தலைவர் மனோகரன் செயலாளர் சுரேஷ் பொருளாளர் வடிவேல் மற்றும் விஜயகுமார் ராமலிங்கப்பிள்ளை ஆதிமூலப் பிள்ளை. கோவில் உறுப்பினர்கள் நிர்வாகிகள் மற்றும் சென்னை கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம் ரெட்டம்பேடு தோக்கம்முர் சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் கோவில் நிர்வாகம் சார்பில் காலை சிற்றுண்டி மதிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment