ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைவு - MAKKAL NERAM

Breaking

Friday, May 24, 2024

ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைவு

 

தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்த நிலையில் அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்து அதிர்ச்சியளித்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 அதிரடியாக குறைந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.96.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment