அமைச்சர் எ.வ.வேலு மகன் சென்ற கார் விபத்து...... - MAKKAL NERAM

Breaking

Sunday, May 12, 2024

அமைச்சர் எ.வ.வேலு மகன் சென்ற கார் விபத்து......

 

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் பெயர் கம்பன், இவர் திமுக மருத்துவ அணியில் நிர்வாகியாக உள்ளார். திருவண்ணாமலை ஏந்தல புறவழிச்சாலையில் இன்று, எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை கல்லூரியில் இருந்து கம்பன் தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது புறவழிச்சாலையின் சந்திப்பில் அவரது காரும், வேட்டவலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற இன்னொரு காரும் திடீரென்று நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இரண்டு கார்களும் பலத்த சேதமடைந்தன. 

இதில் கம்பன் பயணித்த காரில் அவரும், அவரது ஓட்டுநரும் காயமடைந்தனர். இதையடுத்து உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இப்பகுதிக்கு உடனடியாக வந்த காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் விபத்தில் சிக்கிய சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

No comments:

Post a Comment