அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை..... வைகோவின் உடல் நிலை குறித்து துரை வைகோ விளக்கம் - MAKKAL NERAM

Breaking

Sunday, May 26, 2024

அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை..... வைகோவின் உடல் நிலை குறித்து துரை வைகோ விளக்கம்

 

தமிழக அரசியலில் மிக மூத்த தலைவரும் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளருமான வைகோ கீழே விழுந்ததில் காயம் அடைந்ததாகவும் சிகிச்சைக்காக சென்னை சென்று இருப்பதாகவும் வெளியாகியிருக்கும் தகவல் மதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதை உறுதி செய்யும் விதமாக, நாகர்கோவிலில் மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் இல்ல திருமண விழாவில் வைகோவிற்கு பதிலாக அவரது மகன் துரை வைகோ பங்கேற்றார். 

அதனால், வைகோ உடல் நிலை குறித்து அவரது மகன் துரை வைகோ விளக்கம் அளித்துள்ளார்.அவர் தனது எக்ஸ் தளத்தில், "மதிமுக இயக்கத் தந்தை தலைவர் வைகோ நலம் பெறுவார். மதிமுகவின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சகோதரர் வெற்றிவேலின் மகள் மண விழாவில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று திருநெல்வேலி வருகை தந்தார்கள். அப்பொழுது எதிர்பாரா விதமாக நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இன்று காலை சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். 

சிறிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் உடல் நலம் பெறுவார்கள்; வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment