ஏற்காட்டில் கோடை விழா.... மலர் கண்காட்சி இன்று தொடக்கம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, May 22, 2024

ஏற்காட்டில் கோடை விழா.... மலர் கண்காட்சி இன்று தொடக்கம்

 

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு 47-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று (புதன்கிழமை) மதியம் 12 மணிக்கு ஏற்காடு அண்ணா பூங்காவில் தொடங்குகிறது. தொடர்ந்து 26-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

இதற்காக தோட்டக்கலைத்துறை சார்பில் அண்ணா பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் வண்ண, வண்ண மலர்களால் பல்வேறு வடிவங்கள் வடிவமைத்து, அழகுபடுத்தப்பட்டு உள்ளன.

கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வருவார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் அண்ணா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தும் வகையில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கோடை விழாவை முன்னிட்டு ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர். ஏற்காட்டில் மழை பெய்தாலும், கோடை விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment