அறந்தாங்கி அருகேகொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடு..... எம்எல்ஏ உறுதி - MAKKAL NERAM

Breaking

Wednesday, May 8, 2024

அறந்தாங்கி அருகேகொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடு..... எம்எல்ஏ உறுதி


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோபாலப்பட்டினத்தில் படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது குடும்பத்தாரை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் சந்தித்து ஆறுதல் கூறினார். 

அப்போது அவர் நைனா முகமது படுகொலை செய்தி கேட்டு மீளா துயரம் கொண்டேன். இரண்டு பிள்ளைகளுடன் கணவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு அதிகபட்ச அரசு இழப்பீடு பெற்று தருவேன் என்று கூறினார். இச்சந்திப்பின் போது வட்டார தலைவர்கள் சரவணன், கூடலூர் முத்து, அறந்தாங்கி நகர தலைவர் வீராச்சாமி, புதுக்கோட்டை தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் அசாரூதீன், முரளி,மற்றும் அறந்தாங்கி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திக்  உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்.

No comments:

Post a Comment