• Breaking News

    ஓபிஎஸ் அணி பெரம்பலூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கைது


    பெரம்பலூர் மாவட்டம், எசனை கிராமத்தை சேர்ந்தவர்  சுஜாதா இவர் ஓபிஎஸ் அணி மாவட்ட மகளிரணி செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் பெரம்பலூர் மாவட்டம், தொண்டபாடி கிராமத்தை சேர்ந்த சாந்தி என்பவரிடம் தனதுவீட்டை விற்பதாக கூறி ரூ. 47 லட்சம் பெற்றுக்கொண்டு வீட்டையும் எழுதி தராமல் இருந்துள்ளார். இதுகுறித்து சாந்தி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சுஜாதாவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    No comments