கேப்டன் கே.எல்.ராகுலுக்கு தனது இல்லத்தில் விருந்து வைத்த லக்னோ அணி உரிமையாளர் - MAKKAL NERAM

Breaking

Tuesday, May 14, 2024

கேப்டன் கே.எல்.ராகுலுக்கு தனது இல்லத்தில் விருந்து வைத்த லக்னோ அணி உரிமையாளர்

 

17-வது ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் கடந்த 8-ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை வீழ்த்தியது.இந்த ஆட்டத்தில் லக்னோ நிர்ணயித்த 166 ரன்கள் இலக்கை அபிஷேக் ஷர்மா (75 ரன்கள், 28 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்), டிராவிஸ் ஹெட் (89 ரன்கள், 30 பந்து, 8 பவுண்டரி, 8 சிக்சர்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் ஐதராபாத் அணி 9.4 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றது.இந்த போட்டி முடிந்ததும் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சய் கோயங்கா, மைதானத்திலேயே அணியின் கேப்டன் லோகேஷ் ராகுலிடம் ஆக்ரோஷமாக விவாதித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனால் விரக்தி அடைந்த ராகுல் லக்னோ அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், லக்னோ அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல். ராகுலை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். இந்த சந்திப்பின் போது கே.எல். ராகுல் மற்றும் சஞ்சீவ் கோயங்கா ஒருவரை ஒருவர் கட்டியணைத்து பரஸ்பரம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

No comments:

Post a Comment