வடகாஞ்சி என அழைக்கப்படும் புகழ்பெற்ற மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோயிலின் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகுவிமர்சியாக நடைபெற்றது
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அடுத்து பிரசித்திபெற்ற ஸ்தலமாக பார்க்கப்படும் வடகாஞ்சி என பக்தர்களால் அழைக்கப்படும் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் நாள்தோறும் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்வேறு வாகனங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிலையில், பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான ரதோற்சவம் எனப்படும் திருத்தேரோட்டம் இன்று வெகுவிமர்சியாக நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவர் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நிலையில் இருந்து புறப்பட்ட திருத்தேர், 4 மாட வீதிகளில் பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்து வந்தது. அப்போது "கோவிந்தா", "கோவிந்தா" என பக்தர்களின் கோஷம் விண்ணை அதிரவைத்தது. முன்னதாக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வரதராஜ பெருமாளை வழிபாடு செய்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.உடன் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் .ருக்மணி மோகன்ராஜ் துணைத் தலைவர் .அலெக்சாண்டர் மீஞ்சூர் நகர தலைவர் .தமிழ் உதயன் நெய்தவாயல் வினோத் மற்றும் வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி.நிருபர்: எம் சுந்தர்
No comments