திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள புங்கம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சீனிவாச பெருமாள் ஶ்ரீ பாஸ்யகார சுவாமி சன்னதி ஶ்ரீமந்த் நாராயண நந்தவனத்தில் 1007 ஆம் ஆண்டு ஸ்ரீ பகவத் ராமானுஜரின் திரு அவதார சத கலச திருமஞ்சன ஸ்ரீ வைரமுடி விழா நடைபெற்றது.
ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வைர கிரீட முடி ராமானுஜருக்கு சாத்தப்பட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராமானுஜரை தரிசனம் செய்தனர்.. புனிதபுரி ஆசிரமத்தில் ஸ்ரீ பகவத் இராமானுஜரின் 1007 வது திரு அவதார மகா உற்சவ வனாந்தரம் சதகலச வைரமுடி சாத்துதல் திருமஞ்சனம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருவில்லிபுத்தூர் ஸ்ரீரங்கம் திருவள்ளூர் வைத்திய வீரராகவர் திருநின்றவூர் என்னைப் பெற்ற தாயார் பக்தவச்சலப் பெருமாள் உள்ளிட்ட 108 வைணவ திவ்ய தேசங்களில் இருந்து சீர் வரிசைகளை எடுத்து வந்து உவே சுதர்சன ஆச்சாரியார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வைரகீரிட முடியை அணிவித்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இதில் பொன்னேரி மீஞ்சூர் திருவொற்றியூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராமானுஜரை தரிசனம் செய்தனர்.
No comments:
Post a Comment