மதத்தை வைத்து வெறுப்பு அரசியல் செய்யக்கூடாது என்பதை தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குக்கு உணர்த்தியுள்ளன - மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி - MAKKAL NERAM

Breaking

Sunday, June 9, 2024

மதத்தை வைத்து வெறுப்பு அரசியல் செய்யக்கூடாது என்பதை தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குக்கு உணர்த்தியுள்ளன - மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த வானதி ராஜபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசும்பொழுது நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்கு சதவீதத்தை குறைத்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதத்தை அதிகரித்துள்ளது. 

ராமரை வைத்து மத ரீதியாக இந்தியர்களை பிரித்தாள கூடாது, வெறுப்பு அரசியல் செய்யக்கூடாது என்பதை உணர்த்தும் விதமாக ராமர் கோயில் உள்ள பைசாபாத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சிக்கும் மோடிக்கும் வேகத்தடையை ஏற்படுத்தும் விதமாக இந்திய மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர் என்று கூறினார்.

No comments:

Post a Comment