கலைஞரின் 101 -வது பிறந்தநாளை முன்னிட்டு ஊக்கத்தொகை,நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
கலைஞர் 101வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி எம்எல்ஏ அவர்களின் அறிவித்தலின்படி 13வது வார்டு வட்ட கழக செயலாளர் பி.பரமசிவம் அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ஜீஎஸ்டி ரோடு காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள 40 அடி கழக கொடி ஏற்றி வைத்து பின்னர் 13வது வார்டு பகுதியில் இருக்கும் தந்தை இழந்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 30 போர்க்கு கல்வி ஊக்க தொகை தல 1000 ரூபாய் மற்றும் பள்ளி கல்லூரி பயிலும் மாணவ மாணவிகளுக்கு 300 நபர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேக், கல்வி உபகரணங்களை சிறப்பு அழைப்பாளராக 2வது மண்டல குழு தலைவர் பல்லாவரம் வடக்கு பகுதி கழக செயலாளருமான இ.ஜோசப் அண்ணாதுரை அவர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் 13வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரேணுகாதேவி பரமசிவம் மற்றும் 13வது வட்ட கழக நிர்வாகிகள் இளைஞர் அணி நிர்வாகிகள் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments