சிவகங்கை: கிராம வேளாண் முன்னேற்ற குழு விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Thursday, June 27, 2024

சிவகங்கை: கிராம வேளாண் முன்னேற்ற குழு விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது


சிவகங்கை வட்டாரம் அரசிணி முத்துப்பட்டி ஊராட்சி, முத்துப்பட்டி கிராமத்தில் வேளாண்மைத்துறை விரிவாக்க சீரமைப்பு திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் கிராம வேளாண் முன்னேற்ற குழு விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது .

இப்பயிற்சி வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) திருமதி. சண்முகஜெயந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பயிற்சியில் தரமான விதைத்தேர்வு, சான்று பெற்ற விதைகளை வாங்கிடவும், விதைகளை விதை நேர்த்தி  செய்து விதைக்கவும்,நெல் விதைப்பு செய்யும் விவசாயிகள் விதைகளை கடினப்படுத்தி விதைக்கும் முறைகளைப் பற்றியும், அட்மா திட்டப் பணிகளான உள் மாநில,வெளி மாநில, உள் மாவட்ட விவசாய பயிற்சி கலந்து கொள்ளும் முறைகள் பதிவு செய்யும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறினார்கள். 

வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி. வளர்மதி அவர்கள் கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கொடுக்கப்படும் இடுபொருட்கள் பற்றியும், நக்ஷஉள்ள  அமைப்பது பற்றியும், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தால் உரப்பயிரான தக்கை பூண்டு நஞ்சை நிலங்களில் விதைத்து அதனை மடக்கி விழுவதால் மண்வளம் காக்கலாம் எனவும் தொழில் நுட்ப கருத்து வழங்கினார். 

உதவி வேளாண்மை அலுவலர் திரு. சங்கரமூர்த்தி திரவ உயிர் உரங்கள் பயன்பாடு விதை நேர்த்திசெய்யும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறினார். இப்பயிற்சியினை அட்மாத்திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜா ஏற்பாடு செய்தார் இப்பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயிகள் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

No comments:

Post a Comment