• Breaking News

    பிரதமர் மோடி இன்று பதவியேற்பு.... கூடவே இந்த 15 மத்திய அமைச்சர்களும் பதவியேற்பு...?

     

    இந்திய நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பொறுப்பேற்கிறார். அவருடைய பதவி ஏற்பு விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் இன்று மற்றும் நாளை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பிரதமர் மோடியுடன் சேர்ந்த இன்று 15 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சந்திரசேகர், ராம் மோகன் நாயுடு, மன்மோகன் சமல், பிப்லப் தேவ், கிரண் ரிஜஜு, சுனில் தாக்கரே, அனுபிரியா படேல், பிரபுல் படேல், சிராக் பஸ்வான், சோனோவால், சார்பானந்த், தர்மேந்திர பிரதான் மற்றும் அஸ்வினி வைஸ்ணவாகிய ஒரு பொறுப்பேற்க இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

    No comments