சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை இராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் இராம்நகர் பங்குத்தந்தை அருள்பணி வின்சென்ட் அமல்ராஜ் தலைமையேற்று திருவிழா கொடியேற்றினார். இந்நிகழ்வில் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் அருள்பணி ஆரோக்கியசாமி, ஓய்வு பெற்ற தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி மற்றும் அருள்பணி தாமஸ் அடிகளார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.பின்பு நடந்த சிறப்புத் திருப்பலியில் இராம்நகர் பங்குத்தந்தை அருள்பணி வின்சென்ட் அமல்ராஜ் தலைமையில் தூத்துக்குடி யூதா ததேயூ திருத்தலத்தைச் சார்ந்த அருள்பணி அருமைநாதன் ஏழைகளின் உள்ளத்தோர் பேறு பெற்றவர் என்ற தலைப்பில் பங்கு மக்களிடையே மறையுரையாற்றினார்.இந்நிகழ்வில் இராம்நகர் பங்கு இறைமக்கள் மற்றும் கிளை கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை இராம்நகர் பங்கு பேரவையினர் சேய்திருந்தனர்.
Sunday, June 9, 2024
தேவகோட்டை இராம்நகர் உலக மீட்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment