கங்கனா ராணாவத்துக்கு அறைவிட்ட பெண் காவலருக்கு பெரியார் உருவம் பதித்த தங்க மோதிரம்..... தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு
பிரபல நடிகையும் பாஜக கட்சியின் எம்பியுமான கங்கனா ராணாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் பெண் காவலர் குல்வீந்தர் கவுர் என்பவர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் அந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதன் பிறகு கங்கனாவை அறைந்த பெண்ணுக்கு ஆதரவுகள் என்பது பெருகிவரும் நிலையில் தற்போது அவருக்கு பெரியார் உருவம் பொறித்த தங்க மோதிரத்தை பரிசாக வழங்குவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தபெதிக நிர்வாகி பேசியதாவது, நாங்கள் குல்வீந்தர் கவுர் முகவரிக்கு பெரியார் உருவம் பதித்த தங்க மோதிரத்தை அனுப்பி வைக்க இருக்கிறோம். ஒருவேளை இந்த மோதிரத்தை கொரியர் நிறுவனம் ஏற்க மறுத்தால், எங்கள் உறுப்பினரில் ஒருவரை ரயிலில் அல்லது விமானத்தில் நேரில் அனுப்பி வைப்போம். மேலும் அவர் மூலமாக நாங்கள் இந்த தங்க மோதிரத்தை அவரிடம் ஒப்படைப்போம் என்று கூறியுள்ளனர்.
No comments