கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்திய 62 பேர் பலியானது தொடர்ந்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்தார் அதனை தொடர்ந்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கள்ள சாராய விற்பனையை ஊக்குவிக்கும் திமுக அரசை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர் .குறிப்பாக கள்ளக்குறிச்சியில் நீதிமன்ற வளாகம் அருகே காவல்துறையின் துணையுடன் அப்பகுதி திமுக கவுன்சிலர் உதவியோடு கள்ளச்சாராயம் இருக்கும் திமுக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்று 62 பேர் இறந்ததற்கு முழு பொறுப்பேற்று முதல்வர் பதவியை மு க ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழும்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழகச் செயலாளர் சிட்லபாக்கம் சா.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், மகளிர் அணி பொறுப்பாளர்கள் கணித சம்பத், மரகதம் குமரவேல் பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மதுரபாக்கம் எம்.பி.மனோகரன் உட்பட மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் அனைத்து அணி பொறுப்பாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
இதில் முடிச்சூர் ஸ்ரீபாஸ்கர் மற்றும் கணேசன் தலைமையில் முடிச்சூர் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment