தஞ்சாவூர்: மணல் கடத்தலில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர் தலைமறைவு - MAKKAL NERAM

Breaking

Monday, June 3, 2024

தஞ்சாவூர்: மணல் கடத்தலில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர் தலைமறைவு

 

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கொடியாளம் கிராமத்தில் மணல் திருட்டு நடைபெறுவதாக பந்தநல்லூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நேற்று இரவு பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீஸார் அங்கு அதிரடியாக ஆய்வு செய்தனர். 

அப்போது கொடியாளம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள பாமகவை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் எவ்வித அனுமதியும் இன்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளுவது தெரியவந்தது.மணல் அள்ளுவதற்காக ஜேசிபி இயந்திரங்களும் லாரி ஒன்றும் அன்கு நின்றுள்ளது. உடனடியாக காவல்துறையினர் இரண்டு ஜேசிபி இயந்திரங்களையும், ஒரு லாரியையும் பறிமுதல் செய்து பந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். 

மேலும் ஒரு ஜேசிபி இயந்திரம் வரும் வழியில் பழுதானதால் டயரில் உள்ள காற்று அகற்றப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ஜேசிபி மற்றும் லாரி ஓட்டுநர்கள் சரவணன், ஆகாஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மணல் திருட்டு சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், கோவிந்தராஜன் தலைமறைவானார்.

 இதையடுத்து அவரை பிடிப்பதற்காக தடிப்படை அமைத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் கொடியாளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment