இனியும் பாஜகவில் பயணிக்கும் எண்ணமில்லை..... கட்சியிலிருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா ட்வீட் - MAKKAL NERAM

Breaking

Thursday, June 20, 2024

இனியும் பாஜகவில் பயணிக்கும் எண்ணமில்லை..... கட்சியிலிருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா ட்வீட்

 

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே மோதல் வெடித்தது. இது பாஜக கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதைத் தொடர்ந்து தமிழிசை சவுந்தர்ராஜன் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து அண்ணாமலை இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் இது தொடர்பாக இனி யாரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட வேண்டாம் எனவும் கட்சி நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தினார்.இந்நிலையில் திமுக மாநிலங்களவை எம்பி- திருச்சி சிவா மகனும், பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் பொதுச் செயலாளராக இருந்தவருமான திருச்சி சூர்யா, தமிழிசை சவுந்தர்ராஜன் குறித்து கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.இச்சூழலில் தமிழக பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் சாய் சுரேஷ் குமரேசன் வெளியிட்ட அறிக்கையில், “கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்களம் விளைவிக்கும் செயல்களில், திருச்சி சூர்யா ஈடுபட்டு வருகிறார். எனவே, மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி, கட்சியின் எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்படுகிறார்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கெனவே, பாஜகவிலிருந்து நீக்கப்பட்டு, பின்னர் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்ட திருச்சி சிவா, தற்போது இரண்டாவது முறையாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இச்சூழலில் எகஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “அண்ணாமலையால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்தேன். எந்த நிலையிலும் அண்ணாமலை குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன். இனியும் தமிழ்நாடு பாஜகவில் பயணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. சுயமரியாதை முக்கியம். எதன் பொருட்டும் அதை கைவிட முடியாது" என பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment