மேற்கு தாம்பரம் முடிச்சூர் சாலை அருகே கருமாரியம்மன் நகரில் அடாப்ட் குடி, போதை மற்றும் மனநல மறுவாழ்வு மையம் கடந்த 15ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானோருக்கு போதையில் இருந்து மீட்டு நல்வழிபடுத்தி சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
இந்தநிலையில் பாரத் பல்கலைகழகத்தில் செவிலியர் படிப்பினை படித்து சுமார் 50 மாணவர்களுக்கு அடாப்ட் குடி போதை மற்றும் மறுவாழ்வு மையத்தில் ஒரு நாள் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது.
அதன்படி நர்சிங் மாணவர்கள் குடிபோதை சிகிச்சை மையத்திற்கு வரும் நோயாளிகளை எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களை எவ்வாறு பாதுகாப்பக நடத்த வேண்டும். கையாளவேண்டும். அந்த நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மாணவர்களுக்கு கற்று கொடுக்கப்பட்டது.
இறுதியாக அடாப்ட் ஹோம் மையத்தின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் எஸ்.முருகன் மாணவர்களிடம் உரையாற்றும்போது, வழக்கமான நோயாளிகள் போல் அல்லாமல் குடிபோதையால் பாதிக்கப்பட்டவர்களை சிறப்பு கவனத்துடன் கையாளவேண்டும். மேலும் குடிபோதைக்கு அடிமையானவர்களை திருத்தி நல்வழிபடுத்தும்போது, அந்த குடும்பமே நலம் பெற்று நம்மை வாழ்த்தும். எனவே இலாபம் நோக்கம் அல்லாமல் முடிந்த வரை சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த பயிற்சி வகுப்பில் மேனேஜிங் டிரடஸ்டி எம்.மஹாலட்சுமி, மருத்துவர்கள் பாலசுந்தரம், மனநல ஆலோசகர் ஆனந்தி, செவிலியர் உமாதேவி, மற்றும் மகாலட்சுமி, அட்மின் ஸ்டான்லி மற்றும் ருக்குமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment