தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Thursday, June 20, 2024

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது


தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் ஜூன் 18, 19 ஆகிய இரண்டு நாட்கள் திருவள்ளூர் மாவட்டம்,  கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாநில தலைவர் பெ சண்முகம் தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய பொதுச்செயலாளர் விஜுகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், பொருளாளர் கே.பி. பெருமாள் உட்பட்ட தமிழக முழுவதிலுமிருந்து மாநில குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட            தீர்மானங்கள் வருமாறு,

பல லட்சம் மக்களை பாதிக்கும் யானை வழித்தட விரிவாக்கத்தை கைவிட வேண்டும்.

கண்டறியப்பட்ட 20 யானை வழித்தடங்களை, 42 ஆக விரிவுபடுத்தி அறிவித்த வனத்துறை, யானை வழித்தடங்களில் உள்ள விவசாய நிலங்கள், மனித வாழ்விடங்கள், தேயிலை தோட்டங்களை கையகப்படுத்தி அங்குள்ள மக்களை அகற்றி முயற்சிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்,  வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மலைகள் மற்றும் வன ஓரங்களில் பயிர் செய்து வாழ்க்கை நடத்தி வரும் கோவை திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வன ஓரங்களில் பட்டா மற்றும் அரசின் புறம்போக்கு நிலங்களில் பயிர் செய்து ஜீவனம் செய்து வருகின்றனர். இங்கு காட்டுப்பன்றி, மயில், யானை, குரங்குகள் ,  காட்டெருமைகள் போன்றவைகளால் பயிர் சேதம் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. ஒரு சில பகுதிகளில் மனித உயிர் சேதமும், பொருட்கள், வீடுகள் சேதம் ஏற்படுகிறது. 

இதில் வன ஓரமாக வேளாண் பணிகளில் ஈடுபடும் விவசாயிகளில் நெல், வாழை, தென்னை, நிலக்கடலை, போன்ற பயிர்களுக்கு தமிழ்நாடு அரசு தற்பொழுது வழங்கிடும் இழப்பீடு போதுமானதல்ல. உரம், மருந்து இதர செலவினங்கள் குறித்து ஆய்வு செய்து  முழு செலவையும் ஈடு செய்யும் வகையில் இழப்பீடு வழங்க வேண்டும்.

யானை வழித்தட விரிவாக்கத்தை திரும்பப் பெற வேண்டும், போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 22ஆம் தேதி தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்ற  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக விவசாயிகள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் பி.துளசிநாராயணன் வரவேற்றார்.மாவட்ட செயலாளர் ஜி.சம்பத் நன்றி கூறினார்.



No comments:

Post a Comment