நான் இலங்கை சென்றால் என்னை கொலை செய்து விடுவார்கள் - மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி - MAKKAL NERAM

Breaking

Monday, June 10, 2024

நான் இலங்கை சென்றால் என்னை கொலை செய்து விடுவார்கள் - மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி

 

மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள ஆதீனம் மடத்தில் ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழக மக்கள் எல்லோருக்கும் அளந்து வாக்களித்திருக்கிறார்கள். ஒரே வருத்தம் இலங்கை தமிழர்களை கொன்றவர்களையும் வெற்றி பெற்ற செய்திருக்கிறார்கள். அதனால் தான் அவர்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை. மோடி இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார். 

கச்சத்தீவை மீட்க வேண்டும், தமிழீழம் அமைக்க வேண்டும் என பிரதமரை சந்தித்து ஏற்கனவே வலியுறுத்தியுள்ளேன். மீண்டும் பிரதமராகியுள்ள மோடியை நேரில் சந்தித்து தமிழீழத்துக்காக கோரிக்கை வைப்பேன். நான் தமிழீழம் கேட்பதால் இலங்கை சென்றால் சிங்களவர்கள் என்னை கொன்று விடுவார்கள்.பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வணங்கினார். நான் வழங்கிய செங்கோல் நாடாளுமன்றத்தில் எப்போதும் பிரதிபலிக்கிறது. மோடி நாட்டின் சட்டத்தை மதிக்கிறார். காமராஜரையே தோற்கடித்தார்கள் அது தான் தேர்தல் ஜனநாயகம். ஆட்சியில் இருந்தால் திட்டத்தான் செய்வார்கள். திட்ட திட்ட திண்டுக்கல்லு, வைய வைய வைரக்கல்லு, ராமகிருஷ்ணரின் வார்த்தையை மோடி பின்பற்றுகிறார்.

அயோத்தியில் பாஜக வென்றிருந்தால் வாக்கு இயந்திரத்தை குறை கூறியிருப்பார்கள். இது ஜனநாயக நாடு. வெற்றி தோல்வி மக்கள் அளிப்பது தான். மக்களிடம் பாஜக மீது அதிருப்தி இல்லை. காங்கிரஸ் எத்தனை முறை மாநில கட்சிகளின் ஆட்சிகளை கலைத்துள்ளார்கள், ஆனால் பாஜக அப்படி பண்ணவில்லை" என்றார்.

No comments:

Post a Comment