குழந்தைகளுக்கான பொருட்கள் விற்பனை நிறுவனத்தை கம்பத்தில் திறந்து வைத்த சின்னத்திரை நடிகை ஆலியா மானசா
தேனி மாவட்டம் கம்பத்தில் கிட்ஸ்சாப் என்ற குழந்தைகளுக்கான நிறுவனத்தை சின்னத்திரை நடிகை ஆலியா மானசா திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி கடையில் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து சின்னத்திரை நடிகை ஆலிய மானசா நிறுவனத்திற்கு வருகை தந்த வாடிக்கையாளருடன் செல்பி எடுத்து அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்ஆர் பள்ளியின் தாளாளர் ராஜாங்கம், கேஸ் ஏஜென்சியின் உரிமையாளர் பொன் காட்சி கண்ணன், அதிமுக கட்சியின் கம்பம் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் காமய கவுண்டன்பட்டி பேரூர் கழக செயலாளர் ரவி மற்றும் கம்பம் நகரில் முக்கிய அரசியல் நிர்வாகிகள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மேலும் இந்த நிகழ்ச்சியை எஸ்கே ஹோண்டா உரிமையாளர் கிஷோர் மற்றும் கவிதா செல்வராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments