ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அடுத்த மோர்பண்ணை கிராமத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி 42ம் ஆண்டு படகு போட்டி நடைபெற்றது. இந்த படகு போட்டியில் மோர்பண்ணை, தொண்டி, திருப்பாலைக்குடி, உப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 25 பாய்மர படகுகள் கலந்து கொண்டன.
கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு முன்னதாகவே சீட்டு வழங்கப்பட்டு, பங்கேற்பாளர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டது. போட்டி துவங்கியதுமே காற்றின் வேகத்தை முந்தி சிரிப்பாய்ந்த பாய்மரப்படகு ஒன்றோடு ஒன்று போட்டியிட்டு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. இதில் கலந்துகொண்ட படகு ஒன்று திடீரென காற்றின் வேகம் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதில் பயணித்த மீனவர்கள் தத்தளித்த நிலையில், விழா கமிட்டி மற்றும் சக மீனவர்கள் இணைந்து உடனடியாக கவிழ்ந்த படகில் இருந்த மீனவர்கள் மற்றும் படகை பத்திரமாக மீட்டனர்.இதனை அடுத்து மற்றொரு படகானது பாய்மரம் கிழிந்த நிலையில் தொடர்ந்து போட்டியில் முன்னேறி சென்றது.
இதில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு முதல் பரிசாக ஐம்பதாயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 40 ஆயிரம் ரூபாயும், பங்கேற்பாளர்களுக்கு சுழற் கோப்பை மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. இந்த பாரம்பரிய படகு போட்டியை கண்டு மகிழ்வதற்காக சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
No comments:
Post a Comment