விரைவில் ஊழல் பட்டியலோடு சந்திக்கிறேன்..... தமிழிசை சௌந்தரராஜனை சீண்டிய திருச்சி சூர்யா - MAKKAL NERAM

Breaking

Sunday, June 23, 2024

விரைவில் ஊழல் பட்டியலோடு சந்திக்கிறேன்..... தமிழிசை சௌந்தரராஜனை சீண்டிய திருச்சி சூர்யா


திருச்சி சூர்யா பாஜக பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளராக இருந்த நிலையில் சமீபத்தில் அதிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையில் பாஜக பிரமுகர்கள் மணல் கடத்தல் கும்பலிடம் 50 லட்சம் முதல்  80 கோடி ரூபாய் வரை வசூல் செய்வதாக குற்றம் சாட்டி இருந்தார். மேலும் அவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு ட்வீட் மூலமாக தமிழிசையை சீண்டி இருக்கிறார் திருச்சி சூர்யா சிவா. அதில், அக்கா உங்களை மறந்து விட்டேன் என்று நினைத்து விடாதீர்கள். கண்டிப்பாக உங்களுக்கான முக்கியத்துவம் பாஜக கொடுக்கவில்லை என்றாலும் என் மனதில் கண்டிப்பாக உண்டு. உங்கள் நீண்ட ஊழல் பட்டியலை பாண்டிச்சேரியில் எடுத்து தொகுப்பதற்கு கொஞ்சம் தாமதம் ஆகிறது. விரைவில் பட்டியலோடு சந்திக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் பாஜகவில் பூகம்பம் வெடித்துள்ளது.

No comments:

Post a Comment