இன்றைய ராசிபலன் 21-07-2024
மேஷம் ராசிபலன்
புதிய விஷயங்களில்அவசரமாகச்செயல்படுவதைத் தவிர்க்கவும். ஒரு நேரத்தில், ஒரேயொரு விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். நீங்கள் எதைச் செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்யுங்கள். உங்கள் செலவு செய்யும் பழக்கத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். முன்பு எப்போதும் இல்லாத வகையில் இப்போது நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்பதால்,மனதிற்குப்பிடித்ததை உடனேவாங்குவதைத்தவிர்க்கவும். நண்பர்கள் அல்லது அன்புக்குரியவர்கள் இன்று உங்களை ஆச்சரியப்படுத்துவார்கள். நீங்கள் நேசிக்கப்படுவதையும், பாராட்டப்படுவதையும் உணர்வீர்கள். உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களை நினைத்து மகிழ நேரம் ஒதுக்குங்கள். உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியையும், அமைதியையும் பாதிக்கும்விஷயங்களைக் கண்டறிந்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும்.
ரிஷபம் ராசிபலன்
பல விஷயங்கள் நடத்திருக்கலாம், ஆனாலும், வாழ்க்கையில் முன்னேற வேண்டிய தேவை உங்களுக்கு உள்ளது. உண்மையில் உங்களுடன் இணைந்திருந்த நபர், சில காரணத்திற்காக இனி உங்கள் வாழ்க்கையில் இணைந்திருக்கப் போவதில்லை. சமீப காலமாக உங்களைப் பாதித்து வரும் மன அழுத்தம் உங்கள் உடல் நிலையைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்வதில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். தியானம் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது மிகவும் நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது. இது மன அழுத்தத்திலிருந்து வெளியே வர உங்களுக்கு உதவும்.
மிதுனம் ராசிபலன்
இன்று, வாழ்நாள் முழுவதும் நீங்கள் நன்றாக விரும்பும் என கருதும் நபர்களோடு அணிசேருங்கள். இது உங்கள் புதிய முயற்சிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் அல்லது உங்கள் வாழ்க்கை வேறு பாதையை நோக்கி பயணிக்க உதவும். தனிநபர்கள் மற்றும் அவர் சார்ந்த சூழ்நிலைகளில் உள்ள நேர்மறையான குணங்களைக் தெரிந்து கொள்ள உங்கள் மனதைத் திறந்திடுங்கள். மற்றவர் மீது பழிபோடுவதைத் தவிர்த்து, உங்களுக்கு அவசியமில்லா நபர்களிடம் கூட, கரிசனையோடு இருங்கள். இலட்சியத்தோடு பணியினைச் செய்வதற்கு, உங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்து புனரமைப்பு செய்யுங்கள்.
கடகம் ராசிபலன்
தவறான தகவலை விட ஆபத்தானது எதுவுமில்லை. ஒரு புதிய தகவல் உங்களுக்கு வரும் போது, இது நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து வந்ததா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். அறிவுசார் உரையாடல்கள் தென்படுகின்றன. அவை நிறைய விஷயங்களைப் பற்றிய உங்களது அறிவை அதிகரிக்கும். வீட்டில் நடக்கவுள்ள ஒரு சூழ்நிலை நீங்களே பார்த்திராத உங்களுடைய வேறுபட்ட சாயலைக் காட்டிவிடும். நீங்கள் எவ்வளவு வலிமையானவர் என நினைத்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
சிம்மம் ராசிபலன்
நீங்கள் கூடுதலாக சிலதூரம் பயனித்துள்ளீர்கள். மேலும், இதுவரை நீங்கள் செய்த அனைத்து செயல்களிலும் நூறு சதவீதம் (100%) முயற்சியினை செய்துள்ளீர்கள். உங்கள் முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று நீங்கள் உணர்ந்ததால், நீங்கள் உங்களை மிகவும் வருத்திக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் நேர்மறை சிந்தனையோடும், ஊக்கத்தோடும் உணர்கிறீர்கள் என்றால், அதைப்பற்றி பேசுவதற்குப் பதிலாக, அது உங்கள் செயலில் பிரதிபலிக்கட்டும். நீங்கள் மனதில் இருக்கும் புதிய திட்டங்களுக்கு குறைகூறுவோரும், எதிர்மறை சிந்தனை உள்ளவர்களும் எவ்வாறு வினையாற்றுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நேர்மறை ஆற்றலோடு உங்கள் வழியை தேர்வு செய்யுங்கள்.
கன்னி ராசிபலன்
உங்களது மனதில் படுவதை மற்றவர்களிடம் பேசுவது எப்போதும் புத்திசாலித்தனமாக இருக்காது. உண்மையைச் சொல்லப் போனால், நீங்கள் நேர்மையாக இருக்க விரும்புகிறீர்கள். ஆனாலும், அவர்களின் இதயத்தை நொறுங்கச் செய்வதற்கு பதிலாக, எளிதானதும், மனதிற்கினியதுமான வார்த்தைகளை பேசுவதை தேர்வு செய்யுங்கள். அவை அவர்களுக்கு ஊக்கமளிக்கும். மேலும், அது அவர்களின் நாளை நிச்சயமாக மாறும். விமர்சனம் என்பது ஒரு நல்ல விஷயம் தான். ஆனாலும், ஒருவரை அடிக்கடி விமர்சிப்பது என்பது அவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக, அவர்களை காயப்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
துலாம் ராசிபலன்
நீங்கள் அதிக நேரம் செலவிடக்கூடிய உங்களது அறையைத் தூய்மையாக வைத்திருப்பதற்கும், மறுசீரமைப்பதற்கும் கவனம் செலுத்துங்கள். படைப்பாக்கச் சிந்தனையை வளர்ப்பதற்கு தூய்மை மிக முக்கியமானது. இன்று, நீங்கள் எதிர்பாராத சில செய்திகளைப் பெறலாம். அது உங்களுக்கு கசப்பும், இனிப்பும் நிறைந்ததுமான நினைவுகளைத் தரக்கூடும். உங்களை மோசமான சூழல்களுக்கு தள்ளும் விஷயங்களில், நேர்மறையான விஷயங்களைத் தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு சில எதிர்பாராததும், ஆச்சரியமானதுமான பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறலாம். உங்களுக்கு அமையப்பெற்ற ஆசீர்வாதங்களுக்கு நன்றியுடன் இருங்கள். நல்ல எண்ணங்கள், நல்ல விஷயங்களை செயல்படுத்துகின்றன என்பதை நினைவிற் கொள்ளுங்கள்!
விருச்சிகம் ராசிபலன்
இன்று வாழ்க்கை சீராகவும், சாதாரணமாகவும் இருக்கும். இன்று, எதையாவது சிறிது நேரம் தாமதப்படுத்தும் அல்லது குறுக்கிடும் பிரச்சினைகள் இல்லை. எதுவும் வலுவாக அல்லது அடிப்படையில் ஏற்பாடு செய்யப்படவில்லை. உங்களது குடும்பம் தான் உங்கள் பெருமைக்கும் மற்றும் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்கும். மேலும், குழந்தைகள் தான் உங்களது மன அழுத்தத்தை குறைக்கும் நபர்களாக இருப்பார்கள். உங்களது வாழ்க்கையுடனான பிணைப்பானது பாசத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கும். மேலும், வேலைபளு சற்று தளர்வாக இருக்கும். இன்று, நன்மை பயக்கும் விஷயங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன.
தனுசு ராசிபலன்
தேவையற்ற எண்ணங்களே உங்கள் மனதை ஆதிக்கம் செலுத்திவருகின்றன. உங்கள் மனதிலுள்ள அப்படிப்பட்ட எண்ணங்களுடன் முன்னேற நினைக்காதீர்கள். அப்படி செய்தால், நீங்கள் மற்றவர்கள் வெறுக்கத்தக்க வகையில் செயல்படுகிறீர்கள் என்பதாகும். இது உங்களுக்கு ஒரு சிறிதளவு கூட உதவப் போவதில்லை. மாறாக, மற்றவர்கள் உங்களுக்குச் செய்தவற்றிற்காக, நீங்கள் அவர்களை காயப்படுத்த விரும்புகிறீர்கள் என்பதாகும். மற்றவர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ளாத போது, நீங்கள் நல்வழியினை தேர்ந்தெடுத்து, தவறான முடிவுகளிலிருந்து விலகியே இருங்கள்.
மகரம் ராசிபலன்
உங்கள் உடல்நலம் குறித்து நீங்கள் முன்பே கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அதைப் புறக்கணித்தால், உங்கள் எதிர்காலத்திற்காக உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்பட்டு விடும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து, நீங்கள் உயிருடன் இருப்பதற்கு உதவுவார்கள். உங்கள் செலவுகளில் கட்டுப்பாடு தேவை, இல்லையெனில் அதிக செலவுகள் செய்வதை நீங்கள் உணரும் முன்பே செலவுகள் கட்டுக்குள் அடங்காமல் போய் விடலாம்.
கும்பம் ராசிபலன்
சவால்களை ஏற்றுக்கொண்டு, உங்களிடத்திலுள்ள மனோதிடத்தை வரவழையுங்கள். அப்போது, கடினமான பணிகளைச் செய்வதிலிருந்து நீங்கள் விலகமாட்டீர்கள். உங்களுக்குத் தேவைப்படும் போது, குடும்பத்தினரும், நண்பர்களும் உதவுவார்கள். நீங்கள் உங்களது உள்ளக் கிடக்கைகளை அங்கலாய்கும் போது, அவர்கள் உங்கள் பக்கமாக இருப்பார்கள். ஏதேனும் ஒன்றில் சிக்கிக்கொண்டதாக உணரும் போது, உங்கள் அகம்பாவத்தை விடுத்து, உதவி கேட்க தயாராக இருங்கள்.
மீனம் ராசிபலன்
சமீப காலமாக மனஅழுத்தத்தால்அவதிப்பட்டு வருகிறீர்கள். அதுஉங்களைப்பாதித்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைப் பற்றி, தொடர்ந்து நீங்கள் சிந்தித்து வருவது தான் உங்கள்கவலைக்குக்காரணம் ஆகும். மன அழுத்தம் மற்றும் பதற்றம் உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி விடாமல்பார்த்துக்கொள்ளுங்கள். கொஞ்சமாக வேலை செய்தாலும், அதைச்சரியாகச்செய்யுங்கள். இது உங்கள் கவலை மற்றும் மனஅழுத்தத்தைக்குறைக்க உதவும். மனஅழுத்தத்திலிருந்துவிடுபடுவது என்பது உங்களது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். ஏனெனில், மன அழுத்தம் சமீபத்தில் உங்கள்ஆரோக்கியத்தைப்பாதித்திருக்கிறது. உங்கள் மனஅழுத்தத்தைப்போக்க,தியானம் மற்றும் யோகாபோன்றவற்றைச் செய்ய வேண்டும்.
No comments