• Breaking News

    திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசின் மின்சார உயர்வை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு திரளாக நிர்வாகிகள் கலந்துகொள்ள வடக்கு மாவட்ட செயலாளர் பி.பலராமன் அழைப்பு


    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மாதவரம் பகுதியில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சியின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பி. பலராமன் தலைமை  நடைபெற்றது இதில்,  கும்மிடிப்பூண்டி ஒன்றிய பெருந்தலைவர்  கே.எம்.எஸ். சிவக்குமார், ஒன்றிய செயலாளர்கள் நாலூர் முத்துக்குமார், கும்மிடிப்பூண்டி கோபால் நாயுடு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பானு பிரசாத், மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராகேஷ்,பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். 

    கூட்டத்தில் வருகின்ற 23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை திமுக அரசின்  மூன்றாவது முறையாக மின்கட்டணம் விலையேற்றம், நியாயவிலை கடைகளில் வழங்கப்படுவரும் பருப்பு சமையல் எண்ணெய் உள்ளிட்டவைகளை நிறுத்தும் முயற்சியில் ஈடுபடும் திமுக அரசை கண்டித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பொன்னேரி அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டது இதில் ஆரணி நகர செயலாளர் தயாளன்,எஸ்.டி.டீ.ரவி மீஞ்சூர் நகர அவை தலைவர் வழக்கறிஞர் மாரி,மீஞ்சூர் நகர துணை செயலாளர் தமிழரசன், வினோத், எஸ்.பி. அருள்,பொன்னேரி ஸ்ரீதர், குப்பன்,உள்ளிட்ட திரளான அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    No comments