தொடர் கன மழை.... மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2.25 கன அடியாக உயர்வு - MAKKAL NERAM

Breaking

Wednesday, July 17, 2024

தொடர் கன மழை.... மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2.25 கன அடியாக உயர்வு

 

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. எனினும், கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் இருந்ததால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது.  இந்த சூழலில் கபினி  அணை நிரம்பியதால் அணையின் பாதுகாப்பு கருதி 3 நாட்களாக உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.நேற்றைய தினம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 5,054 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 20,910 கன அடியாக அதிகரித்துள்ளது.  நேற்று காலை 43.83 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை  46.80 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2.97 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 15.85 டி.எம்.சி ஆக உள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் கடந்த ஆண்டு நடைபெற்றது.ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் குருவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது.  மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டது.  கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்தது.

இந்த நிலையில் கர்நாடக அணைகளில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 16,577 கன அடியில் இருந்து 20,910 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment