மீண்டும் முடங்கிய மைக்ரோசாப்ட்..... சென்னையில் 2-வது நாளாக விமான சேவை பாதிப்பு
உலகம் முழுவதும் நேற்று மைக்ரோசாப்ட் இணையதளம் crowd strike காரணமாக முடங்கியதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இதைத்தொடர்ந்து இன்றும் இரண்டாவது நாளாக மைக்ரோசாப்ட் இணையதளம் முடங்கியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் 2-வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதோடு 30க்கும் மேற்பட்ட விமானங்கள் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
No comments