• Breaking News

    ஊனைமாஞ்சேரியில் ₹.51 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு 7 ஆண்டுகளாக திறக்கப்படாத சமுதாய கூடத்தை திறக்க கோரி மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் பொதுமக்கள் மனு


    ஊனைமாஞ்சேரியில் ₹.51 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு 7 ஆண்டுகளாக திறக்கப்படாத சமுதாய கூடத்தை திறக்க வேண்டும் என்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் ஒன்றிய குழு பெருந்தலைவரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காரணைப்புதுச்சேரி மற்றும் ஊனைமாஞ்சேரி ஆகிய ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் காரணைப்புதுச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. 

    இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் காரணைப்புதுச்சேரி நளினிஜெகன், ஊனைமாஞ்சேரி மகேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், காட்டாங்குளத்தூர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.டி.லோகநாதன், வண்டலூர் தாசில்தார் புஷ்பலதா ஆகியோர் கலந்துகொண்டு ஏராளமான பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

     அப்போது ஊனைமாஞ்சேரி பொதுமக்கள் திரண்டு வந்து கடந்த 2016-2017 ஆம் ஆண்டு செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ நிதியில் ₹.51 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் 7ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை. எனவே மேற்படி சமுதாய கூடத்தை செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ திறந்து வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மனு கொடுத்து வலியுறுத்தினர். இதில் காரணைப்புதுச்சேரி ஊராட்சி மன்ற துணை தலைவர் வினோதினிஞானசேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பத்மநாபன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    No comments