கும்மிடிப்பூண்டி: மாவட்ட வேலை வாய்ப்பு துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம்
திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு துறை சார்பில் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு முகாம், எஸ்.கே.சேப்டி விங்க்ஸ் நிறுவனம் இணைந்து கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி துணை தலைவர் எம்.சீனிவாசன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் எல்.சுகுமாறன். ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு முன்னிலை வகித்தனர். முகாமில் எஸ்.கே.சேப்டி விங்க்ஸ் நிறுவன பொது மேலாளர் எச்.மாதவ பிரகாஷ் வரவேற்றார்.
தொடர்ந்து இந்த வேலை வாய்ப்பு முகாமை திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு துறை துணை இயக்குனர் விஜயா பங்கேற்று, வேலைவாய்ப்பு முகாம் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து முகாமில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்டவர்களுக்கு நேர்காணல் நடைபெற்றது.
இந்த நேர்காணலில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, விரைவில் பணி நியமன கடிதம் வழங்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு துறை துணை இயக்குனர் விஜயா தெரிவித்தார்.
No comments