• Breaking News

    கடவுள் என் பக்கம் இருக்கிறார்..... அதனால் தான் உயிர் தப்பினேன் - டிரம்ப்

     


    அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிரம்ப் தற்போது குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த டிரம்பை துப்பாக்கியால் சுட முயற்சித்தனர். இதில் அவர் தலையை அசைத்ததால் குண்டு அவரது காதின் மேற்பகுதியை உரசி சென்றது. இருப்பினும் இந்த சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து துப்பாக்கியால் அவரை சூட முயற்சித்த தாமஸ் க்ரூக்ஸ்(20) என்ற வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இதுகுறித்து கடந்த 18-ம் தேதி குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் பேசிய அவர், நாம் மிகப்பெரிய வெற்றியை காண உள்ளோம். மேலும் எனக்கு ஏற்பட்ட இந்த சம்பவத்தில் நான் நூலிழையில் உயிர் தப்பினேன். “கடவுள் என் பக்கம்  இருப்பதால் தான் நான் உயிர் தப்பினேன் என்றார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் இறந்த பாதுகாப்பு வீரருக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். மேலும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள் டிரம்பை போல் அவர்களது காதுகளில் கட்டுப்போட்டிருந்தது பலரது கவனத்தை ஈர்த்தது.

    No comments