குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் - MAKKAL NERAM

Breaking

Saturday, July 20, 2024

குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்

 


தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பும் சுற்றுலா தளமாக இருக்கிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 1 வாரமாக தொடர் சாரல் மழை பெய்து வருவதால், ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், சிற்றருவி உள்ளிட்ட பல அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிப்பதற்காக குடும்பமாக வர தொடங்கினர். இன்று விடுமுறை நாள் என்பதால் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்துவிட்டு, அங்குள்ள உணவுகள் மற்றும் பழ வகைகளை வாங்கி கொண்டு செல்கின்றனர். மேலும் இன்று வானம் மேகமூட்டத்துடன், சாரல் மழை பெய்வதால் குளிர்ந்த சூழல் நிலவுகிறது.

No comments:

Post a Comment