தாம்பரம் அருகே சாலையில் கிடந்த ரூ.98 ஆயிரம் பணத்தை தனியார் நிறுவன ஊழியர் நாடார் சங்க நிர்வாகிகளுடன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
சென்னை சேலையூர் அடுத்த மப்பேடூ புதூர் நகரை சேர்ந்தவர் டானியல் தனியார் நிறுவன ஊழியரான இவர் அதிகாலை பணிக்கு செல்ல வெங்கம் பாக்கம் பிரதான சாலை வழியாக சென்றார், அப்போது ஒரு சிறிய அட்டை பெட்டியில் 500 ரூபாய் தாள்கள் கட்டாக கிடந்துள்ளது, அதனை எடுத்து என்னிய போது 98 ஆயிரம் இருந்தது, உரியவரிடம் ஒப்படைக்க நினைத்தாலும் தவறவிட்டவரின் விலாசம் இல்லாததால் தன் சகோதரர் சமுவேல் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு அவசரமாக பணிக்கு சென்றார்.
இந்த பணத்தை பெற்ற சாமுவேல் தங்களுக்கு தெரிந்த நாடார்சங்க நிர்வாகிகளுடன் சேலையூர் காவல் நிலையம் சென்ற நிலையில் அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் கலைமகளிடம் 98 ஆயிரத்தை ஒப்படைத்தானர், மேலும் இதுகுறித்து காவல் துறை கட்டுப்பாட்டு அறைமூலம் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது பணத்திற்கு உரியவர்கள் தகுந்த ஆதாரத்துடன் அளித்ததால் வழங்கப்படும் என தெரிவித்தனர் உடன் அகரம்தென் மப்பேடு வட்டார நாடார்கள் ஐக்கிய சங்கம் நிறுவனர் கணபதிராமன், நாடார் சங்க சித்தாலப்பாக்கம் பொதுச்செயலாளர் மாதவன், அகரம்தென் மப்பேடு ஐக்கிய சங்க பொதுச் செயலாளர் மகாராஜன், பொருளாளர் கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் இருந்தனர்.
No comments