மக்கள் உயிருடன் விளையாடும் விடியா திமுக அரசுக்கு கண்டனம் - ஈபிஎஸ்
சென்னை அடையாறில் மாநகர அரசு பேருந்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை அடையாறில் மாநகர பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அதில் உயிர் சேதம் ஏற்படாதவாறு துரிதமாக செயல்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு என்னுடைய பாராட்டுகள்.
இந்த விடியா திமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படாதது குறித்தும், பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாதது குறித்தும் நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இது போன்ற சம்பவங்களில் நடவடிக்கை எடுக்காமல் மக்கள் உயிருடன் விளையாடும் விடியா திமுக அரசுக்கு என்னுடைய கண்டனங்கள். மேலும் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் உயிருடன் விளையாடாமல் பேருந்துகளின் தரத்தை முறையாக ஆய்வு செய்வதோடு புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
No comments