அரசியல் பிரமுகர்கள் பற்றி அவதூறு பேச்சு.... நடிகை ஸ்ரீரெட்டி மீது வழக்கு - MAKKAL NERAM

Breaking

Monday, July 22, 2024

அரசியல் பிரமுகர்கள் பற்றி அவதூறு பேச்சு.... நடிகை ஸ்ரீரெட்டி மீது வழக்கு

 

நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் தெலுங்கு கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி. பட வாய்ப்பு தருவதாக தன்னை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார். உடைகளை களைந்து போராட்டமும் நடத்தினார்.

தெலுங்கு நடிகர்கள் நானி, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், இயக்குனர்கள் சேகர் கம்முலு, கொரட்டல சிவா, கதாசிரியர் கோனா வெங்கட் உள்ளிட்ட பலர் இவரது செக்ஸ் புகாரில் சிக்கினர். தமிழ் நடிகர்கள் மீதும் புகார் அளித்து இருந்தார்.தற்போது அரசியல் பிரமுகர்கள் மீதும் ஸ்ரீரெட்டி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்-மந்திரி பவன் கல்யாண், மந்திரிகள் லோகேஷ், அனிதா ஆகியோர் பற்றி ஸ்ரீரெட்டி அவதூறாக பேசியதாக கர்னூல் மூன்றாவது டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீரெட்டி மீது போலீசார் பல பிரிவுகளின் கீழ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment