கள் விற்பனை.... தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு - MAKKAL NERAM

Breaking

Monday, July 22, 2024

கள் விற்பனை.... தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

 

சென்னை உயர் நீதிமன்றத்தில் முரளிதரன் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் மதுபான கடைகளில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் சில குறிப்பிட்ட மது வகைகள் மட்டுமே கிடைக்கிறது. அதோடு அதிகமான விலைக்கும் விற்பனை செய்கிறார்கள். எனவே மதுபானங்களை ரேஷன் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

அதோடு கள் விற்பனை செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மதுபானங்களை ரேஷன் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் போன்றவைகளில் விற்பனை செய்வது தொடர்பாக முடிவு எடுப்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் யாரும் தலையிடக்கூடாது என்று வாதிட்டார். 

அப்போது பேசிய நீதிபதிகள் மீண்டும் ஏன் கள் விற்பனை செய்யக்கூடாது என்றார். அதன்பிறகு கள் விற்பனை செய்வது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்யக்கூடாதா.? மேலும் இது தொடர்பாக வருகின்ற 29ஆம் தேதி தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனக் கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

No comments:

Post a Comment