• Breaking News

    அறந்தாங்கி அருகே கார் விபத்தில் பெண் பலி - 3 பேர் படுகாயம்


    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே காசியார்மடம் எனும் இடத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதிய விபத்தில் அந்த காரில் பயணித்த ஒரு பெண் உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த மற்ற மூவரையும் அருகே உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

     புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த பாருக் அலி (40), சுல்தான் பீவி (50), மைமூன் பீவி (55), ரசூல் பீவி (60) ஆகிய நான்கு நபர்களும் மீமிசல் பகுதியை  நோக்கி காரில் கொண்டிருக்கும் பொழுது காசியார்மடம் என்னும் இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே உள்ள புளியமரத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே ரசூல் பீவி உடல் நசுங்கி  உயிரிழந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் மற்றவர்களை மீட்டு அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தீயணைப்புத் துறையினர்  நீண்ட போராட்டத்துக்குப் பிறகு உயிரிழந்த ரசூல் பீவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    No comments