அதிகாரியின் கையெழுத்தை போலியாக போடுவது திமுக அரசில் சாதாரண ஒரு விஷயம் - பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் பேட்டி - MAKKAL NERAM

Breaking

Wednesday, July 31, 2024

அதிகாரியின் கையெழுத்தை போலியாக போடுவது திமுக அரசில் சாதாரண ஒரு விஷயம் - பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் பேட்டி


செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதி பாஜக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு, மாநில செயற்குழு தீர்மானங்கள் மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் அஸ்தினாபுரம், குமரகுன்றம் பகுதியில் மாவட்ட பொதுச்செயலாளர் கே.எஸ்.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், மாவட்டத் தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம், மாநில மருத்துவ பிரிவு துணைத் தலைவர் டாக்டர் கோபி அய்யாசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறுகையில் : 

உதயநிதிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒரு தனியார் நிறுவனத்தை நடத்துகின்ற ஆந்திராவை சேர்ந்த ரெட்டி நடத்துகிற ரேஸுக்கு தமிழகம் எங்கும் இருக்கின்ற மிக முக்கிய தொழிலதிபர்களிடம் மிரட்டி பணம் வாங்கப்படுகிறது.

அதுவும் எந்த வகையில் என்றால் தமிழக அரசின் உடைய கமர்சியல் டேக்ஸ், சுற்றுப்புற சூழல் போன்ற துறைகள் மூலம் மிரட்டப்பட்டு அதிகாரிகள் எல்லாம் இன்றைக்கு வசூல் செய்யும் அதிகாரிகளாக மாறி அப்பட்டமாக சொல்ல வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் உள்ள பல ஐஏஎஸ் அதிகாரிகள் ஆளுகின்ற கட்சிக்கு புரோக்கர்களாக செயல்படுகிறார்கள்.அந்த புரோக்கர்களை வைத்து பணம் வசூல் செய்து அந்த ரேஸ் நடைபெறுகிறது.இது தேவைதானா என்பதை உணர வேண்டும்.

நிதி பற்றாக்குறை இருக்கிறது என்று சொல்கிற இந்த மாநிலத்தை ஆளுகின்ற முதலமைச்சர் திட்டங்களுக்கு வசூலிக்கலாம் ஆனால் தனது மகன் நடத்தும் ரேசுக்கு வசூலிப்பது ஞாயம் இல்லை என்பது எங்களது கருத்து.இதை தான் எங்கள் மாநிலத் தலைவர் வெளிப்படையாக மட்டுமல்ல ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எப்போதுமே ஆதாரங்களைப் பற்றி திமுக அரசு கவலைப்படுவதில்லை, ஒட்டுமொத்தமாக முடிந்து அவர்கள் வீட்டுக்கு போகும் போது தான் ஒப்பாரி வைப்பார்கள்.ஆண்டு வரை அவர்களுக்கு தெரியாது இன்றைக்கு தருகின்ற ஆதாரங்கள் உடைய சக்தி என்னவென்று அவர்களுக்கு புரியாது.மிக விரைவில் புரிய வைக்கின்ற காலம் வந்து தீரும்.நீண்ட காலத்திற்கு ஏமாற்ற முடியாது, மக்கள் சக்தியும் ஏமாற்றுக்காரர்களை பார்த்துக் கொண்டிருக்காது.

500 ரூபாய் கொடுத்து வாக்கு வாங்கினால் போதும் என்று நினைத்தால் அது நீடிக்காது என்பதை உணர்த்துகின்ற வகையில் தான் இன்று பயத்தின் உச்சிக்கு சென்று தான் நிதி ஆய்வு கூட்டத்திற்கு செல்லாமல் முதலமைச்சர் தடுமாறுகிறார்.

தமிழகத்தில் இருக்கின்ற சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் 65 ஐஏஎஸ் அதிகாரிகள், 116 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி விட்டு சட்டம் ஒழுங்கு இருக்கிறது, சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படுகின்றது என்று சொல்லுகிறார்.சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட்டால் எதற்காக இந்த மாறுதல்.இதையெல்லாம் மறைப்பதற்காக தான் நிதி கேட்டு நெடும் பயணமாக இந்த போராட்டத்தை தமிழக அரசு நடத்திக் கொண்டிருக்கின்றது.இந்தப் போராட்டத்தின் நோக்கமே தமிழ்நாட்டில் நடக்கின்ற சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை மறைப்பதற்கு நடத்துகின்ற நாடகம்.

அதிகாரியின் கையெழுத்தை போலியாக போடுவது திமுக அரசில் சாதாரண ஒரு விஷயம், அதிகாரிகள் உடைய கையெழுத்து, அமைச்சர்களின் கையெழுத்து, பெண் தலைவர்கள் இருக்கின்ற பல நகராட்சிகளில் திமுக செயலாளர்கள் உட்கார்ந்து கொண்டு ஆட்சி செய்வது எல்லாம் கோப்புகளையும் தங்களிடம் தான் கொண்டுவர வேண்டும் என சொல்வது, ஏன் முதலமைச்சரே அப்படித்தான்.

முதலமைச்சர் எப்படியோ நாடும் அப்படி, முதலமைச்சரின் கோப்புகளே இன்று சபரி சுந்தரன் பார்க்கிறார் என்ற பெரிய குற்றச்சாட்டு உள்ளது.ஐஏஎஸ் அதிகாரிகள் தினமும் 10 பேர் கோப்புகளை தூக்கிக் கொண்டு சபரீசன் வீட்டில் இருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு.

அந்த குற்றச்சாட்டுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டும், இவர்கள் பினாமி ஆட்சி நடத்துகிறார்கள்.இன்று தெரியாத்தனமாக ஒரு நல்ல அதிகாரியின் கையெழுத்தை போட்டுவிட்டு மாட்டிக்கொண்டு உள்ளார்கள். அந்த அதிகாரி விடமாட்டார், நேர்மை எவ்வளவு காலத்திற்கு பாதுகாக்கப்படும் என்று பார்ப்போம்.

அவருக்கும் இவர்கள் ஏதாவது செய்வார்கள், மணல் திருட்டை கண்டுபிடித்த தாசில்தார் மீது லாரியை வைத்து அடிப்பார்கள், இந்த ஐஏஎஸ் அதிகாரிக்கு என்ன நடக்கப் போகிறது என்று தெரியாது. இன்னும் பத்து நாள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment