நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை.... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் - MAKKAL NERAM

Breaking

Tuesday, July 16, 2024

நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை.... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்


 மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியான பாலசுப்பிரமணியன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இன்று காலை நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் அவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். அமைச்சர் பி டி ஆர் வீட்டிற்கு அருகிலேயே இந்த கொலை நடந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அவர் மீது சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் முன்விரோதம் காரணமாக நடந்த கொலையா அல்லது குடும்ப பிரச்சனை காரணமாக நடந்த கொலையா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர் மீது மூன்று கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும் போலீசார் இந்த வழக்கை தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment