• Breaking News

    ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் உயிருக்கு ஆபத்து..... மத்திய உளவுத்துறை எச்சரிக்கை

     

    ஆந்திர மாநிலத்திற்கு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி ஆகியவை பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர் கொண்டன. இதில் இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.ஆந்திர மாநில துணை முதல்வர் பதவி பவன் கல்யாணுக்கு வழங்கப்பட்டது.

     இந்நிலையில் பவன் கல்யாண் குறித்த மத்திய உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பவன் கல்யாணின் உயிருக்கு ஆபத்துள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. சில சட்டவிரோத அமைப்புகளிடம் பவன் கல்யாண் பற்றிய பேச்சு வந்துள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

    பவன் கல்யாணை தொடர்பு கொண்டு இதுகுறித்து எச்சரித்துள்ளதாகவும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அந்த குழுக்கள் யார் என்பது குறித்து இப்போது கூற முடியாது என்றும் உளவுத்துறை கூறியுள்ளது. தற்போது ஆந்திராவின் துணை முதல்வராக உள்ள பவன் கல்யாணுக்கு 24 மணி நேரமும் முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    No comments