ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்த பிஎஸ்என்எல்.....
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. இந்த கட்டண உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை அறிவித்துள்ளது.அதன்படி பிஎஸ்என்எல் 249 ரூபாய்க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டம் 45 நாட்களுக்கு நீடிக்கும். மொத்தம் 90 ஜிபி டேட்டா ஒரு நாளைக்கு இரண்டு ஜிபிக்கு சமம். ஒரு நாளைக்கு 100 இலவச எஸ் எம் எஸ் வழங்கப்படும்.
No comments