திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி உட்பட்ட பகுதிகளில்அதிமுக வடக்கு மாவட்ட கழக சார்பில் ஆரணி தச்சூர் கூட்டு சாலை மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் செயலாளர் சிறுணியம். பி பலராமன் தலைமையில் துண்டு பிரச்சாரங்கள் வழங்கப்பட்டது இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா கலந்து கொண்டார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் சட்டம் ஒழுங்கு சீர்கேடு கள்ளச்சாராயம் மரணங்கள் வீதிக்கு வீதி கஞ்சா தெருக்கு தெரு போதை மாத்திரை விற்பனை அதிகரித்துவதை குறித்து ஆரணி பேரூராட்சி பகுதிகளில் அதிமுக நகர செயலாளர் தயாளன் ஏற்பாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் துண்டு பிரசாரங்கள் வழங்கப்பட்டது அப்போது திமுக அரசின் ஆட்சியின் அவல நிலை குறித்து மக்கள் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டது இதில் வழக்கறிஞர் ஈஸ்வரன் துளசி மூர்த்தி ஆரணி பேரூராட்சிநிர்வாகிகள் பொறுப்பாளர்கள்.உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர் ஆரணி தச்சூர் மீஞ்சூர் பஜார் வீதிகளில் துண்டு பிரச்சாரங்களை வழங்கினார்கள்.


0 Comments