ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி யார் என எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்தால் சொல்லட்டும் - அமைச்சர் ரகுபதி - MAKKAL NERAM

Breaking

Sunday, July 21, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி யார் என எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்தால் சொல்லட்டும் - அமைச்சர் ரகுபதி

 

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திருவள்ளூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து வருகிறார்கள். இதனால் அடுத்தடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். 

இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவது தான் எங்களுடைய கடமை. இதில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை.சதி செயல்களில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்படும் நிலையில் இதற்கு நீதிமன்றம் தான் பதில் சொல்ல வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளி யார் என்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்தால் அவர் உண்மையை சொல்லட்டும் என்று கூறியுள்ளார். 

அதாவது ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் உண்மையான குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியதால் அதற்கு பதிலடிகளுக்கும் விதமாக அமைச்சர் ரகுபதி உண்மை குற்றவாளி யார் என்று தெரிந்தால் அவர் சொல்லட்டும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment