• Breaking News

    தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு ஏற்படுத்த வலியுறுத்தி தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


    தாம்பரம் சண்முக சாலையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில்  தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு ஏற்படுத்த வலியுறுத்தி மாவட்ட தலைவர் எஸ். கே ஜாகிர் உசேன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஹஜி கமிட்டி தலைவரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான ப.அப்துல் சமது எம்எல்ஏ, மாநிலத் துணைப் பொதுச் செயலாளரும் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான தாம்பரம் எம். யாக்கூப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று பூரண மதுவிலக்கை  அமல்படுத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்ட ஈடுபட்டனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தமிழகம் முழுவதும் மது விளக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் மரணம் 65 ஆக உயர்ந்துள்ளது அனாதைகளாகப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி உதவி பத்து லட்சம் உதவி என பல உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது .இவை அனைத்தையும் மனிதநேய மக்கள் கட்சி வரவேற்றாலும் இதற்கான நிதியை அரசு கஜானாவில் இருந்து எடுக்காமல் இதற்கெல்லாம் காரணமான அதிகாரிகள் அவர்கள் காவல்துறை அதிகாரிகளாக இருந்தாலும் சரி அவர்களின் சம்பளப் பணத்தில் இருந்து இந்த நிதி உதவிகளை மக்களுக்கு நிவாரணமாக வழங்கி இருக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

     மது கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் அதிகரிக்கும் என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஏனென்றால் மதுக்கடைகள் நிறைந்திருக்கும் இன்றைய காலத்திலும் கள்ளச்சாராயத்தின் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என தெரிகிறது இன்னும் போதையை அதிக படுத்த வேண்டும் என்பதற்காக சாதாரண சாமானிய எளிமை மக்கள் போதையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நச்சு சாராயத்தை குடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் அதனால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு அருமையான திட்டங்களை தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறார் மாணவ சமூகம் தமிழகத்தில் வளர்ந்து ஒரு அருமையான கல்வி நிலையை அடைய வேண்டும் என்பதற்காக பல கட்டமைப்புகளையும் தொழில்துறைகளையும் வளர்த்தெடுக்க அதற்கான திட்டங்களை வகுத்து தமிழக அரசு செயல் பட்டு கொண்டிருக்கிறது பல்வேறு மாநிலங்களுடனும் போட்டியிட்டு இந்தியாவிலேயே முதன்மையான மாநிலம் என வளர்ந்து கொண்டிருக்கும் தமிழகம் இன்னொரு புறத்தில் மதுவால் சீரழிந்து கொண்டிருக்கிறது இதை தடுத்து நிறுத்தும் வகையில் பூரண மதுவிலக்கு நடைபெறுகிறது.

    No comments