திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெரிய ஒபுலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லை காக்கும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது யாக கலச பூஜைகளுடன் கலச நீர் மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் கோபுர கலசங்களுக்கும் அம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்கள் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளர்கள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி .ஜெ கோவிந்தராஜன் நகரத் தலைவர் அறிவழகன். மீசை ராஜா வார்டு உறுப்பினர்ராஜா கௌதம். கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் மற்றும் சேர்மன் கே எம் எஸ் சிவகுமார் ஓ .எம். கிருஷ்ணன்.எஸ் எம் ஸ்ரீதர் தன்ராஜ் மு.க சேகர் .டி.சி. மகேந்திரன் எம் .எஸ். எஸ். டி சரவணன்.முல்லைவேந்தன் இமயம் மனோஜ் புதுகுமுடிபூண்டி சுகுமாரன் செதுதமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் சேகர் குருமூர்த்தி தாஸ் சுரேஷ். தொழிற் சங்கம் மோகன். ஊராட்சி மன்ற தலைவர் செவ்வந்தி மனோஜ் கும்மிடிப்பூண்டி மாதர்பாக்கம் எளாவூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment