திருட போன இடத்தில் மெய் மறந்து தூங்கிய திருடன் - MAKKAL NERAM

Breaking

Monday, July 22, 2024

திருட போன இடத்தில் மெய் மறந்து தூங்கிய திருடன்

 

தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (61). இவர் தனது வீட்டுக்கு பக்கத்தில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 5 மணியளவில் ராராஜேந்திரன் கடைக்கு சென்றுள்ளார். அப்ப்போது கடையை திறந்தபோது உள்ளே இளைஞர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இளைஞரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த விசாரணையில் அந்த இளைஞர் விஸ்வநாத் என்பதும், கடையில் திருட முயன்றபோது போதையில் இருந்ததால் அங்கேயே அசந்து தூங்கியதும் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment