• Breaking News

    லண்டன் செல்லும் அண்ணாமலை..... செயல் தலைவர் பதவிக்கு காய் நகர்த்தும் தமிழிசை

     

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் தொடர்பான கோர்ஸ் படிக்க லண்டன் செல்ல உள்ளார். மூன்று மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம் அங்கிருந்து கட்சி தொடர்பான வேலைகளை அண்ணாமலை பார்த்துக் கொள்வார் எனவும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் இடைப்பட்ட காலத்திற்கு செயல் தலைவரை நியமிக்க கட்சி தலைமை முடிவெடுத்துள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அதேசமயம் அந்த பதவிக்கு தமிழிசை காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அமித்ஷாவை அவர் சமீபத்தில் சந்தித்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    No comments